மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம்
ஜன 22
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெரும் மழையால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது . இதில் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாயினர்.
பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி நாகை மாவட்டம் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும், வேதாரணியம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், சுப்பையன், வேதாரண்யம் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் எம் .நமசிவாயம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

