தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் வாக்காளர் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின்போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஆகவே இந்த தேசிய வாக்காளர் தினமான 25.01.2021
தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுக்கப்படுகிறது.
தேர்தலின்போது வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுக்கப்படுகிறது.அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துளை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட குற்ற ஆவணக்கூடம் ஜெரால்டுவின், நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் தேவி, நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மயிலகுமார், கணேசபெருமாள், மாரியப்பன், அருணாசலம், காவேரி, சரஸ்வதி, உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
