அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
வேதாரண்யம் ஜன 21
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி, கீழ்வேளுர், வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருமண உதவித்தொகை 2018லிருந்து வழங்கப்படவில்லை என்பதை அறிந்து, அப்படி வழங்கப்படாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டுமென்று 94,000 நபர்களுக்கு திருமண உதவி தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்; அனைத்து அடிதட்டு மக்களின் துன்பங்களை போக்குகின்ற வகையிலும், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் நம் அரசு செயல்பட்டு வருகிறது. நம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று நாகப்பட்;டினம், வேதாரண்யம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி, கீழ்வேளுர், வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ரூ.4,87,54,336 மதிப்பீட்டில்; 619 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தினையும்,மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.4,38,594 மதிப்பீட்டில் 11 மாற்றுத்திறனாளிக்கு வங்கிக்கடன் மற்றும் திருமண நிதியுதவி தொகையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,71,000 மதிப்பீட்டில் விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி, முதிர்கன்னி, உழவர் பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற 171 பயனாளிகளுக்கு உதவி தொகையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.3,49,151 மதிப்பீட்டில் 46 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள், ரோட்டவேட்டர், அட்மாதிட்டம் (சுழல்நிதி) உளுந்து, பச்சைபயிறு விதைகள்,தார்பாய், திரவ ரைசோபியம்,pரடளநள அn அiஒவரசநஇமரக்கன்றுகள் போன்ற நலதிட்ட உதவிகளையும், தோட்டக்கலை துறையின் சார்பில் ரூ.73,700 மதிப்பீட்டில் 38 பயனாளிகளுக்கு சாமந்தி குழித்தட்டு நாற்றுகள், மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், காய்கறி விதை தளைகள், முந்திரி கன்றுகள், ஊட்டச்த்து தளைகள், கொத்தவரை விதைகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1,10,00,000 மதிப்பீட்டில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினையும், மகளிர் திட்டம் சார்பில் ரூ.71,50,000 மதிப்பீட்டில் 18 மகளிர் சுய உதவி குழுவிற்கு நலத்திட்ட உதவிகளையும் விழாவில் வழங்கப்படுகிறது.
மேலும்,நம் அரசின் துறைகள் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தகுதியுள்ள அதாவது ஆதரவற்றோர், உழைக்கும் திறன்மற்றும் வயது முதிர்ந்தோர் ஆகிய பயனாளிகள்; பெற்று பயன்பெற வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டம் போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் மக்களின் பங்களிப்பை பொறுத்து அதாவது உதாரணமாக மக்கள் 33 சதவீத பங்கீடு செய்தால் மீதமுள்ள 67 சதவீத அரசு பங்கீடு செய்யும். ஊராட்சிகளில் நடைபெறும் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை போல் பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் தமிழக அளவில் கீழ்வேளுர் பேருராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயன்பெறும் பயனாளிகள் அரசின் நலத்திட்டங்களை உரியவர்களுக்கு செல்லும் வகையில் கொண்டுசெல்ல வேண்டும். ஊரக பகுதிகளுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்திற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் பட்டியலில் இடம் பெறாதவர்கள் பயன்பெறலாம். பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டா உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு மானியத்தின் மூலம் வீடு கட்டி தருவதை பயன்படுத்தி கொள்ளுமாறும் மேலும், நம் மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெறுக்கும் வகையில் முதல் கட்டமாக தலைஞாயிறு பகுதிகளில் 10 கறவை மாடுகள் உள்ள வீடுகளை தேர்வு செய்து பால் கூட்டுறவு அங்காடியில் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஊரகம் மற்றும் நகர்புற மக்களின் தேவைகளை மக்களே பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏதுவாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்தார்.
இவ்விழாவில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், துணை ஆணையர் கலால் குணசேகரன், தனித்துணை ஆட்சியர் ராஜன், துணை ஆட்சியர் வருவாய் நீதிமன்றம் சங்கர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், கீழ்வேளுர் வட்டாட்சியர் அமுதா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அஜிதா ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலாகள் கண்ணன் (திட்டச்சேரி), சரவணன் (கீழ்வேளுர்), திருஞானசம்மந்தம் (வேளாங்கண்ணி), குகன் (தலைஞாயிறு), வட்டார ஆத்மா திட்ட தலைவர்கள் செல்வசெங்குட்டுவன் (திருமருகல்), கோவிந்தராஜன் (கீழ்வேளுர்), தாமஸ் ஆல்வா எடிசன் (கீழையூர்), மகாகுமார் (தலைஞாயிறு), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

