தூத்துக்குடி மாவட்ட விளையட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 79பேருக்கு மெடல் மற்றும் 54 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 106 பயனாளிகளுக்கு பேருக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

விழாவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், புளியம்பட்டி ஆய்வாளர் தர்மர், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா, புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகிய 8பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கம் வழங்கப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்னு சந்திரன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் கலோன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், டவுண் டிஎஸ்பி கணேஷ், தூத்துக்குடி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காவல்துறை செய்தி தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். கரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

செய்தி தொகுப்பு: செய்தி ஆசிரியர் எம்.ஆத்திமுத்து
