நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்;
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமானது நடைபெற்றது.
இதில் மாண்புமிகு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி /தலைவர், திருமதி.S.சுமதி,M.L., மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தூத்துக்குடி அவர்கள் தலைமை தாங்கினார்.
மேற்படி நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாமில் போக்சோ நீதிமன்ற நீதிபதி, குடும்ப நல நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதி, ஏனைய நீதிபதிகள் மற்றும் தூத்துக்குடி சித்தா மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் திரு.ஜான் மோசஸ், திரு.லஷ்மிகாந்த், திருமதி. லதா, நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் உட்பட 200-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி.S.சுமதி.,M.L., அவர்கள் தொடங்கி வைத்தார்.மேற்படி நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி திருமதி.M.ப்ரீத்தா., M.L., மற்றும் மூத்த நிர்வாக உதவியார் திரு.S.தாமரைச்செல்வம் , பணியாளர்கள் திரு.A.நம்பிராஜன், திரு.T.பால் செல்வம் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


