
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நமது பாரத நாட்டின் 72 வது குடியரசு தினத்தை ஒட்டி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தேசியக்கொடியினை ஏற்றி காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்களுக்கு மத்தியில் குடியரசு தின வாழ்த்துக்களுடன் குடியரசு தின உரை நிகழ்த்தினார்கள், பின்னர் காவலர்களுக்கும் அங்கு இருந்த பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .

குடியரசு தின நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டம்ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் தேவராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகோபால், காவலர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
செய்தி ஆசிரியர் எம்.ஆத்திமுத்து

