கோடிக்கரையில் சமத்துவ பொங்கல் விழா.
வேதாரணியம் ஜன17
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை ஊராட்சியில் 17 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 17 பெண்கள் சுய உதவி குழு பெண்கள் அனைவரும் கோடிக்கரை ஸ்ரீ கோடி முத்துமாரியம்மன் ஆலயம் முன்புறமாக 17 பொங்கல் பானைகள் வைத்து பொங்கலிட்டனர். மும் மதங்களைச் சேர்ந்த பெண்கள் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கலிட்டு, கும்மியடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .சிறுமிகள் புடவைகள் அணிந்து அவர்களும் கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

