திருப்பத்தில் இருந்த பள்ளத்தை சரி சேய்து மூடிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள்.
மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் இருந்த பள்ளத்தை போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் சரி செய்தனர்.
மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் அவனியாபுரம் பகுதியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் திருப்பத்தில் பள்ளம் ஒன்று இருந்தது.
இப்பள்ளம் நாளாக நாளாக பெரிய பள்ளமாய் உருவாகி கொண்டே சென்றது.
இப்பள்ளம் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்தத்தோடு விபத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது.
இதனை போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் நவநீதன் மற்றும் ஜமால் மைதீன் ஆகியோர் பள்ளத்தை மூட ஏற்பாடு செய்து மூடினார்கள்.
போக்குவரத்து காவலர்களின் பணியை கண்ட அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் உதவி ஆய்வாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

