முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105 ஆவது பிறந்தநாள் விழா- வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை.
வேதாரணியம்
ஜன 17
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா வேதாரண்யத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வேதாரணியம் சட்டமன்ற, உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாகவும், திருத்துறைப்பூண்டி சாலை அருகேயும் அதிமுக கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டிருந்த எம். ஜி. ஆரின் திருவுருவப் படங்களுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதில் வேதாரணியம் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன் , வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பையன், நகர செயலாளர் வழக்கறிஞர் நமசிவாயம் , அம்பிகாதாஸ்,A.1 மாரியபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

