சென்னை B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஏசி கோடிலிங்கம் தலைமையில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை ஜனவரி 17
உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இந்த நன்னாளில் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு கொண்டாடுவது நமது பாரம்பரியம்.
அதன் ஒருபகுதியான இடைவிடாத பணிச்சுமையிலும் காவல் துறையினர் தங்களோடு பணியாற்றும் காவலர்கள் உடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு காவலர்களின் மனச்சுமையினை நிச்சயம் குறைக்கும் என்பதில் மாற்றமில்லை.
சென்னை B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஏசி கோடிலிங்கம் தலைமையில்
பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏசி கோடிலிங்கம் தலைமை தாங்கினார். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பலர் இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
காவல் நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதனையடுத்து கடவுளுக்கு படைத்த பொங்கலை சக காவலர்களுக்கும், அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தும் பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சியின் இறுதியாக குழுவாக புகைப்படம் எடுத்தும், பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டும் காவலர்கள் மகிழ்ந்தனர்.
சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதில் மிகவும் கண்டிப்பானவர் ஆக இருக்கும் கோடி லிங்கம்
தன்னுடன் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோரை அன்போடு நடத்தி பணிகள் செய்ய சொல்பவர் ஏசி கோடிலிங்கம் இவரது டிவிஷனல் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்றுவதற்கு காரணம் ஏசி கோடிலிங்கம் அவர்களின் அணுகுமுறையே காரணம். பல்வேறு பணி சுமைகள் இருந்தாலும் நேரம் ஒதுக்கி தங்களுடன் பணியாற்றும் காவலர்களின் மன மகிழ்ச்சிக்காக காவல்நிலையத்தில் பொங்கலிட்டு சிறப்பு செய்த வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆணையர் கோடிலிங்கம் அவர்களின் செயல்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள் போலீஸ் செய்தி நியூஸ் சேனல் குழுமம் சார்பில் ஏசி கோடிலிங்கம் மற்றும் காவலர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
செய்தி தொகுப்பு
புஷ்பராணி
உதவி ஆசிரியர் போலீஸ் செய்தி

