நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
வேதாரணியம்
ஜன 16
நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது திருமணத்திற்கு முன் கூட்டிய அனுமதி பெற்ற திருமணங்கள் நூறு ஆட்களுடன் நடைபெறும் என்றும் ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்றும், பஸ்,ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது அதனைத்தொடர்ந்து இன்று 16.01.2022 நாகை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது இறைச்சிக்கடைபலசரக்கு கடை, டீ கடை, மதுக்கடை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்து . இருசக்கர வாகனம் ஆட்டோ, கார் பேருந்து போன்ற வாகனங்கள் செல்லாததால்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது, காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்பு வசதியும் செய்திருந்தனர்.

வேதாரண்ய நகரின் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் கொரோனா விதிமுறைகளை மீறி வாகனத்தில் செல்பவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

