• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த். தலைமையில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
January 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த். தலைமையில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த். தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் .அரவிந்த். தலைமையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களிடையே தெரிவிக்கையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனைக்குபின் கொரோனா நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கு அருகாமையில் உள்ள நோயின் தன்மையை கண்டறியும் மையத்தில், கொரோனா நோயின் தன்மையை கண்டறிந்து, அதன் பின் வீட்டு தனிமைப்படுத்துதல் அல்லது பாதுகாப்பு மையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, தீவிர கவனிப்பு தேவைப்படுபவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி, மருத்துவனை, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோணம் அரசு தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தினமும் ஆலோசனை மேற்கொண்டு, முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்கத்தின் போது செய்யப்பட்ட முன்னேற்பாடு பணிகளை தற்போது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த விவரங்களை கல்லூரி முதல்வர் அவர்களிடம் கேட்டறியப்பட்டது.

Previous Post

கோடிக்கரையில் மாட்டுப் பொங்கலையொட்டி மீன் விலை ஏற்றம்

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In