• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!! ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

policeseithitv by policeseithitv
January 15, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!!  ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக  300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்புமுனையாகும் ஸ்டெர்லைட் விவகாரம்!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக

300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு கோலம் வரைந்த கிராம மக்கள்!

——

தூத்துக்குடி, ஜனவரி,15,

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி கிராம மக்கள் வீட்டின் முன் கோலமிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள அய்யனடைப்பு, சாமிநத்தம், ராஜாவின் கோவில், தெற்கு வீரபாண்டியபுரம், தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, சில்லாநத்தம், பண்டாரம்பட்டி, மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், சங்கரபேரி, சில்வர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல வீடுகளில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்து கோலங்கள் வரையப்பட்டுள்ளது.

பொங்கலின் போது வீட்டின் முன் வரையப்பட்ட வண்ணக் கோலத்தின் முன் பொங்கலோ பொங்கல் என்ற வாசகத்துடன் “மரம் போல் என்றும் செழித்து வளரும், திறக்கட்டும்.. திறக்கட்டும்.. ஸ்டெர்லைட் திறக்கட்டும், நீதி வேண்டும்.. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் போன்ற வாசகங்களை கோலத்தின் முன்னால் எழுதி தங்களது ஆதரவை தெரிவித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் முன்பு இவ்வாறு கோலம் வரையப்பட்டிருந்தன. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கிராம மக்களும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர் வாரம் தோறும் மாவட்ட ஆட்சியரை கிராம மக்களை நேரில் சந்தித்து ஆலையை திறக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். மகளிர் குழுக்கள் மற்றும் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க இந்த ஆளை பல்வேறு வகையில் உதவி செய்து வந்ததாகவும் அதுபோல் மாணவர்கள் கல்வி பெறுவதற்கு டியூசன் சென்டர் அமைத்து அதற்கு ஆசிரியர்களுக்கு சம்பளம் ஸ்டெர்லைட் ஆலை மூலம் வழங்கப்பட்டு வந்தது அதுபோல் சுயதொழில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது. மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் பல்வேறு உதவிகள் மகளிர்கள் மற்றும் ஏழை எளிய பெண்கள் மாணவர்கள் ஆகியோருக்கு கிடைக்கப்பெறாமல் இருந்ததால் இந்த ஆலை மீண்டும் துவக்க வேண்டும் தூத்துக்குடி வாழ்வாதாரம் பெறுவதற்கு இந்த ஆலை திறக்க வேண்டும் என தற்போது கோரிக்கைகள் வலுத்து வருகிறது ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து ஆலை திறக்க வேண்டுமென பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் ஆலய திறக்க வலியுறுத்தி வருகின்றனர் அந்த அடிப்படையில் நேற்று கிராம மக்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்கள் வீட்டு முன்பு கோலம் போட்டு தங்கள் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து இருக்கின்றன. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மக்களின் கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Previous Post

பென்னி குயிக்கின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Next Post

வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Next Post
வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேதாரணியத்தில் திருவள்ளூர் தினம் பாட்டாளி மக்கள் கட்சிமற்றும் வேதாரணியம் லயன்ஸ் சங்கம் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In