அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை.
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவனியாபுரம் நகர் பகுதியில் எந்தவித வாகனங்களும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளைகளை சேகரிக்கும் இடம் உள்ளது.
அந்த சாலையில் எந்த வித வாகனங்கள் செல்லாத வகையில் பைபாஸ் ரோட்டில் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல அவனியாபுரம் நகர் பகுதிக்கு நுழையும் அனைத்து வழிகளிலும் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
சு.இரத்தினவேல்
செய்தியாளர்
மதுரை.

