மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை மாவட்டம் பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
வரும் 15ம் தேதி பாலமேட்டிலும், வரும் 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இப் போட்டி நடக்கும் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 31 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 62 காவல் ஆய்வாளர்கள் , 182 சார்பு ஆய்வாளர்கள் இவர்களுடன் 1500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது.

சு.இரத்தினவேல்
நிருபர்
மதுரை.

