தாலிக்குதங்கம் மற்றும் திருமணநிதியுதவிதொகை வழங்கும் விழா -மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
வேதாரண்யம் ஜன 13
நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற 60 பயனாளிகளுக்கு ரூ.52,11,360 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி தொகையினை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை எம்.எல்.ஏ முகமதுஷாநவாஸ், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டிற்கு நாகப்பட்டினம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 1,386 பயனாளிகளுக்கு ரூ.5கோடியே 10லட்சத்து 82 ஆயிரத்து 416 மதிப்பிலான தங்க நாணயம் மற்றும் ரூ.5 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகை மொத்த மதிப்பாக ரூ.10கோடியே 78லட்சத்து 57ஆயிரத்து 416 மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முதல் கட்டமாக 60 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி ரூ 52,11,360 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இதில்; நாகப்பட்டினம், கீழ்வேளுர், கீழையூர், திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய 6 ஒன்றியங்களிலும் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 60, 60 பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மின் பணபரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.30,00,000 லட்சம், மற்றும் வழங்கப்பட்ட தங்கம் ரூ.22,11,360 மொத்தமாக ரூ.52,11,360 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
வறுமைகோட்டிற்கு கீழே வாழும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து முடித்த பெண்ணின் திருமணத்திற்கு நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்ககாசு ஆகியவை 17.05.2011 முதல் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வுயர்த்தி வழங்கப்பட்ட தங்கத்தை பெறுவதற்கு 23.05.2016 அன்றோ அல்லது அதற்கு பிறகு திருமணம் நடைபெற்று இருத்தல் வேண்டும்.
முதல் கட்டமாக தாலுக்காவிற்கு 10 நபர்கள் வீதம் 60 நபர்களுக்கு வழங்க இருக்கிறோம். இதன் பிறகு நகராட்சி,பேரூராட்சி வட்டம் வாரியாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறைவான நபர்களுக்கு இந்த வாரம் முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பித்துள்ள ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து வழங்கப்படும், அதில் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து வழங்குவதே அரசின் நோக்கமாக உள்ளது. அதனால் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால்,மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர்; கணேஷ்குமார், தொழில் கூட்டுறவு அலுவலர் புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

