• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

policeseithitv by policeseithitv
January 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாணவ, மாணவியர்கள்  ‘Coffee With Collector”  என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர்,

தனித்திறமை வாய்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள்
‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(13.01.2022) திருச்சுழி ஒன்றியத்தில்; 21 அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறமை வாய்ந்த 21 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘Coffee With Collector” என்ற புதிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று இரண்டாவது முறையாக அரசு பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்;ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, மாணவர்கள் தற்போது பள்ளி கல்வி பயிலும் போதே தங்களுக்கென்று ஒரு தெளிவான இலக்கை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சி செய்ய வேண்டும் என்றும், பள்ளி படிப்பு படிக்கும் போதே, எந்த கல்லூரியில் உயர்கல்வி பயில வேண்டும் என்று திட்டமிடல் வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக, எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் சில மாணவர்கள் தோல்வியை சந்தித்தால், மரணம் என்ற தவறான முடிவை எடுக்கிறார்கள். இது முற்றிலும் ஒரு தவறான அணுகுமுறையாகும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்றும், இன்று பல்வேறு துறைகளில் வெற்றியடைந்த மனிதர்கள் அனைவரும், வெற்றி, தோல்வி, பல்வேறு தடைகளை தாண்டி வந்தவர்கள் தான். எனவே உங்களுடைய இலக்கை அடைவதற்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் போதும். மாணவர்கள் நீங்கள் தோல்வியை சந்திக்கும்போது அந்த தோல்வி எதனால் வந்தது என்று அதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த தோல்வியிலிருந்து நாம் பாடத்தை கற்றுக்கொண்டு, இலட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டும்.
இதைவிட மிக முக்கியாமானது, நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் இந்திய குடிமையியல் பணி, இந்திய காவல் பணி, மருத்துவ பணி உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் சாதிப்பதற்கு பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்துக்களையும், மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நிறைவாக, மாணவ, மாணவிகள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான தங்களது சந்தேகங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து, எங்களது வீட்டிற்கும், நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்போம் என்றும், இந்த நிகழ்;ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

செய்தி தொகுப்பு: விருதுநகர் மாவட்ட செய்தியாளர் எம்.மாரிமுத்து,

புகைப்பட கலைஞர் பா.பாக்கியராஜ்

Previous Post

திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Next Post

கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை – அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள்

Next Post
கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை – அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள்

கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை - அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In