• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 13, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர், ஜன 13,

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் ரூ.46.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(13.01.2022); சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., தலைமையில், 55 படித்த ஏழை எளிய பெண்களுக்கு ரூ.25.25 இலட்சம் திருமண நிதி உதவிகள் மற்றும் ரூ.20.88 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் என மொத்தம் ரூ.46.13 இலட்சம் மதிப்பில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் மாண்புமிகு அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் காக்கும் அரசாக, செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது.
மாவட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் வட்டத்தில் 358 பெண்களுக்கு ரூ.276.92 இலட்சம் மதிப்பிலும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 333 பெண்களுக்கு ரூ.259.93 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டத்தில் 166 பெண்களுக்கு ரூ.124.53 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டத்தில் 158 பெண்களுக்கு ரூ.116.24 இலட்சம் மதிப்பிலும், நரிக்குடி வட்டத்தில் 115 பெண்களுக்கு ரூ.79.41 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 226 பெண்களுக்கு ரூ.171.31 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டத்தில் 232 பெண்களுக்கு ரூ.179.83 இலட்சம் மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 300 பெண்களுக்கு ரூ.240.15 இலட்சம் மதிப்பிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் 181 பெண்களுக்கு ரூ.138.72 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டத்தில் 600 பெண்களுக்கு ரூ.466.80 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் வட்டத்தில் 431 பெண்களுக்கு ரூ.343.14 இலட்சம் மதிப்பிலும் என 3100 படித்த ஏழை எளிய பெண்களுக்கு ரூ.2396.98 இலட்சம் மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளது.


அதன் முதற்கட்டமாக 55 படித்த ஏழை எளிய பெண்களுக்கு ரூ.25.25 இலட்சம் திருமண நிதி உதவிகள் மற்றும் ரூ.20.88 இலட்சம் மதிப்பில் தலா 8 கிராம் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் என மொத்தம் ரூ.46.13 இலட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவிகள் மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கங்கள் வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி.இந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு: எம்.மாரிமுத்து,
பா.பாக்கியராஜ்

Previous Post

புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் 

Next Post

மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

Next Post
மாணவ, மாணவியர்கள்  ‘Coffee With Collector”  என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

மாணவ, மாணவியர்கள் ‘Coffee With Collector” என்ற நிகழ்ச்சி மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In