தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேசிய நெடுஞ்சாலையின் கியூப் எனும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று (23.01.2021) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தேசிய நெடுஞ்சாலையின்; கியூப் எனும் நெடுஞ்சாலை ஒப்பந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக கயத்தாறு சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தேசிய நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கொடியை ஏற்றினார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வாக தலைக்கவசம் அணிதல் மற்றும் சீட்பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் பற்றியும், இந்த சுங்கச் சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய ஒலிப்பதிவை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலையின் கியூப் என்னும் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகி திரு. லோகநாதன், மேலாளர் திரு. சிவகுமார், மற்றும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கலைக் கதிரவன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து, உதவி ஆய்வாளர்கள் திரு. அரிகண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

