அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா
வேதாரண்யம் ஜன 12
நாகப்பட்டினம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு காயரோகணசுவாமி நீலாயதாட்சி அம்மன் திருக்கோயிலில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ் திருநாளாம் தைதிருநாளில் ரூ.10 கோடி மதிப்பில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து இன்று பயனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது.

நம் மாவட்டத்தில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் 90 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு பருத்திவேஷ்டியும், 110 பெண் பூசாரி மற்றும் பணியாளர்களுக்கு புடவையும், 286 ஆண் பணியாளர்களுக்கு முழு கால்சட்டை மற்றும் மேல் சட்டைதுணியும், 116 ஆண் பணியாளர்களுக்கு வேஷ்டி மற்றும் மேல்சட்டை துணியும் கொள்முதல் செய்து அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை 1செட் வழங்கப்படுகிறது.
மேலும் இந்தஅறிவிப்பின் மூலம் நம் மாவட்டத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் சுமார் 602 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் தென்னரசு, உதவி இயக்குநர் ராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

