டி எஸ் பி முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்களுடன் பொங்கல் நிகழ்வு கட்டுப்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது :
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே வழிகாட்டுதலின்படி பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் அனைத்து சமுதாய பெரியோர்கள் மற்றும் இளைஞர்களுடன் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுத்திடும் வகையிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்திடும் கோக்கோடும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்திடும் வகையிலும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பொங்கல் திருநாளினை முன்னிட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டவோ, ஒலிபெருக்கிகள் அமைத்து விளையாட்டு போட்டிகள் நடத்திடவோ கூடாது என்றும், வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திட வேண்டும், என்றும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதுடன்,சமுதாயத்தில் பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்திடும் வகையில் தவறுகள் நடப்பதாய் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி, தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வைரமணி, சார்பு ஆய்வாளர்கள் பாண்டியராஜன், மணிகண்டன், ஈஸ்வரன், முத்துமாரியப்பன், மற்றும் சக காவலர்கள், உட்பட பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

