புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.
வேதாரணியம்
ஜன 11
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை பகுதியில் 150க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளது . இவற்றில் மீன்பிடிக்க செல்ல கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு நிரம்பி காணப்படுவதால் கடற்கரையிலிருந்து படகை கடலுக்குள் கொண்டு செல்வதற்கும், கடலில் இருந்து கரைக்கு கொண்டு வருவதற்கும் மீனவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வேதாரணியம் வந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் புஷ்பவனம் கடற்கரை பகுதிக்கு சென்று சேறு நிறைந்த கடற்கரை பகுதியை பார்வையிட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் மீன்துறை அதிகாரிகளிடம் சேறு நிறைந்த பகுதியை எப்படி அகற்றுவது என கலந்தாலோசித்தார்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

