• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு

policeseithitv by policeseithitv
January 11, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் வீடு புகுந்து  தங்க நகைகளை திருடியவர் கைது – ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் அதிரடியாக மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து  தங்க நகைகளை திருடியவர் கைது – ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மீட்பு – எதிரியை கண்டுபிடித்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

♻️தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில், கார்த்திகேயன் (40), த/பெ. கிருஷ்ணன், காமராஜர் நகர், விளாத்திகுளம் என்பவர் கடந்த 11.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு திறந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 35,000/- பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காரத்திகேயன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

♻️இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், காவலர்கள் லிங்கராஜ் மற்றும் குருசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்ய உத்தரவிட்டார்.

♻️மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எட்டையாபுரம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் விவேக்ராஜா (30), த/பெ. சீனிவாசன், காமராஜர் நகர், விளாத்திகுளம் என்பதும், மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திகேயனும் மேற்படி எதிரி விவேக்ராஜாவும் பக்கத்து வீட்டுகாரர்கள் என்பதும், கார்த்திகேயன் வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்திருக்கும் இடத்தை அறிந்து வைத்துள்ளதும், கடந்த 11.01.2021 அன்று கார்த்திகேயன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டை சாவியால் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூபாய் 35,000/- பணத்தை திருடியதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் மேற்படி எதிரி விவேக்ராஜா என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்குள் நுழைந்து தங்கநகைகளை திருடியவரை கைது செய்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

Next Post

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

Next Post
புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

புஷ்பவனம் கடற்கரையோரத்தில் அதிக அளவில் சேறு கரை ஒதுங்கி உள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In