வேதாரண்யம்ஜன 10
வேதாரண்யம் கடலோரத்தில் ஒதுங்கிய 18 கிலோ கஞ்சா – வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றி விசாரணை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில் 18 கிலோ கஞ்சாவை வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடலோரப் பகுதியில் கடலோர காவல் குழும காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான ஆய்வாளர் செல்வராசு உள்ளிட்ட கடலோர காவல் படை போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது வேதாரண்யம் கடற்கரை அடுத்த மணியன் தீவு கடற்கரை பகுதியில் தலா 2 கிலோ வீதம் 9 பொட்டலங்களில் 18 கிலோ கஞ்சா கரை ஒதுங்கி இருந்தது . அதைக் கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

