இராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள காவலர் ஆயுதப்படை மைதானத்தில் அறம் செய்வோம் அறக்கட்டளை-2020, வாசன் கண் மருத்துவமணை மற்றும்
செட்டிநாடு மருத்துவமணை இணைந்து காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இதயம் சம்பந்தமான பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் இராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குறிய தீபா சத்யன் இ.கா.ப மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு கலந்துகொண்டு காவலர் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான பரிசோதனையை துவக்கிவைத்து அதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவது சம்பந்தமாக காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே முக கவசம் அணிதல் சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்துக்கொண்டு பயன் பெற்றனர்.

