பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது
நாகர்கோவில்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி தை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் சுவாமி கோயிலும் ஒன்று இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது மாலை 6 மணிக்கு மங்கல இசையும் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது, தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலை மாலை சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற உள்ளது மேலும் இரவு சுவாமியும் அம்பாளும் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது, இன்னிசை கச்சேரி , நிகழ்ச்சி பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது,
17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது விநாயகர், பூதலிங்கசாமி சுவாமி அம்பாள் எழுந்தருளி நான்கு ரத வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது அதனை தொடர்ந்துஉள்ளது சப்த வர்ணம் நிகழ்வும் நடைபெறும் இதில் அழகிய மணவாளன பெருமாள் கோயில் முன்பு சுவாமியும் அம்பாளும் அழகிய மணவாள பெருமாள் சுவாமியிடம் விடைபெறும் நிகழ்வுகள் நடைபெறும் மறுநாள் 18ஆம் தேதி இரவு 10 மணிக்கு தெப்பத் திருவிழாவும், தொடர்ந்து ஆனந்தவல்லி சப்த வர்ணம் நிகழ்வு நடைபெறுகிறது, விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை பூதலிங்கசுவபக்த பக்தர்கள் பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தினார்கள் இத்திருவிழாவில் வருபவர்கள் மு க கவசம் அணிந்து வருவது கட்டாயம் சமூக இடைவெளி பின்பற்றவும் கோயில் அறநிலை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

