• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*

policeseithitv by policeseithitv
January 9, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.*
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தூத்துக்குடி மாவட்டம்: 9.01.2022*

*ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்கு இன்று தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து புதிய பேருந்து நிலையம் சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நடைபெறும் வாகன சோதனையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.*

*தற்போது பரவி வரும் ஒமைக்ரான் கொரோன பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று (09.01.2022) ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1000 போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.*

*காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (09.01.2022) தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.*

*அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது. அதன்படி இன்று (09.01.2022) முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு எந்த கடைகளும் திறப்பதற்கு அனுமதி இல்லை. பால் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் வழக்கம்போல் இயங்கும். ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.*

*மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி நகரில் 25 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 64 முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என 6,200 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணம் ரூபாய் 12,50,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.*
*இந்நிகழ்வுகளின்போது தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

Previous Post

மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Next Post

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

Next Post
குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In