நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வழங்கினார்.
வேதாரண்யம் ஜன 8
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட ஆண் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக நவீன வாசக்டமி தினத்தை முன்னிட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெற்ற முகாம்களில் கலந்துக்கொண்டு கருத்தடை சிகிச்சை செய்த கொண்ட 50 ஆண் பயனாளிகளுக்கு தலா ரூ.5000மும், தாய்காக்கும் திட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்ட 7 தாய்மார்களுக்கு தலா ரூ.2000மும் ஊக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வட்டார அளவில் அதிக பிரசவம் பார்த்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தலைஞாயிறு மருத்துவகுழுவிற்கு பாராட்டுச் சான்றினையும், செவிலியர், களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றினையும், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டுச் சான்றினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு விஸ்வநாதன், குடும்பநல துணை இயக்குநர் மரு. ஜோஸ்பின் அமுதா, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சாந்தி, இணை இயக்குநர் நலபணிகள் மரு.ராணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

