• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்

policeseithitv by policeseithitv
January 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கான முதல் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர், துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
நாகர்கோவில். ஜன:9,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காரவிளை சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்.அரவிந்த், இன்று (08.01.2022) துவக்கி வைத்து தெரிவிக்கையில் :-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரவிளை சமுதாய நலக்கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டது.
முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்த தயாராக உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறிப்பிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முதல் கட்ட பணியானது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, காரவிளை சமுதாய நலக்கூடத்தில் 1200 வாக்குசாவடி மையங்களுக்கு 20 சதவீதம் அதிகமாக மொத்தம் 1503 வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்.அரவிந்த், தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்).நாகராஜன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Previous Post

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

Next Post

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

Next Post
கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

கடந்த வருடம் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் .வில்சன் நினைவு தினம் அனுசரிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In