• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எட்டையாபுரம் பள்ளியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாடு

policeseithitv by policeseithitv
January 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எட்டையாபுரம் பள்ளியில் எஸ்பி  ஜெயக்குமார் தலைமையில் ஒமைக்ரான் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி –  டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டையாபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று (08.01.2022) ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலை உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தற்போது 15 வயதிற்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்.

மேலும் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. ஆகவே மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளாகிய உங்களுக்கு கல்வி ஒன்று தான் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். நீங்கள் கல்வியை நல்ல முறையில் பயின்று வருங்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த சாதனையளர்களாக திகழ வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

பின்னர் அப்பள்ளியிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில், எட்டையாபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார்  செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமையாசிரியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் அவ்வை, மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துமாரி, எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பொன்ராஜ், முருகன், பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Previous Post

கொரானா (ஒமைக்ரான்) பராமரிப்பு மையத்திற்கு வேதாரண்யம் ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 135000/-மதிப்பில் பத்து செட் கட்டில்- மெத்தைகள்

Next Post

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

Next Post
கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In