ஓமைக்ரான் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
தற்போது ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (07.01.2022) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கனகபாய் உதவி ஆய்வாளர் தமிழ் மோகன் காந்தி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

