இன்று விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா பள்ளியில் வைத்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு SOS செயலி விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, போக்சோ சட்ட விழிப்புணர்வு, குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிவது ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.இளவரசு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.முத்துமாரி, ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி முதல்வர் திரு.ஆபிரகாம் வசந்தம் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

