நாங்குநேரி உட்கோட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து எதிரிகளை கைது செய்ய உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படையினர்.
மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதகுளம் பகுதியில் தவறுதலாக சிகிச்சை அளித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இரண்டு எதிரிகளையும்,
மூன்றடைப்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூரப்பபுரத்தில் கடந்த 26.12.2021-ம் தேதி பார்வதி என்பவரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த எதிரி ரவிசங்கர் என்பவரையும், நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரிகள் மூன்று நபர்களை கைது செய்து எதிரியிடமிருந்து 8½ பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யவும்
நாங்குநேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 25000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவரையும்
விஜயநாராயணம் காவல்நிலைய திருவடனேரி பகுதியில் பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் எதிரியை கைது செய்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்யவும் முழுஈடுபாட்டுடன் பணி செய்து எதிரிகளை கைது செய்ய, உதவிய நாங்குநேரி உட்கோட்ட தனிப்படை காவல் துறையினரான தலைமை காவலர்கள் ஆறுமுகநயினார், நம்பிராஜன், முதல் நிலை காவலர் பெருமாள், இரண்டாம் நிலை காவலர்கள் ராமராஜன், மற்றும் துரைமுருகன் ஆகியோர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப பாராட்டி பரிசு வழங்கினார்.

