விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு நடைபெற்றது.
கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் வியாபாரி சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள், பொதுமக்கள் ஆகியோர்க்கு முகக்கவசம், விழிப்புணர்வு சீட்டுகள் கொடுக்கப்பட்டது மற்றும் சமூகஇடைவெளி கடைபிடிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள், ஆய்வாளர் திரு. இளவரசு,உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளினர்கள் ,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


