• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எட்டையாபுரம் பகுதியில் வர் பிளான்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – சரக்கு வாகனம் பறிமுதல்

policeseithitv by policeseithitv
January 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எட்டையாபுரம் பகுதியில் வர் பிளான்டில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – சரக்கு வாகனம் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பவர் பிளான்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது – 210 கிலோ காப்பர் வயர் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் – எதிரியை கைது செய்து காப்பர் வயர்கள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலிசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை  கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில்  எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முஹம்மது தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர் கலியுகவரதன், எட்டையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் கணேசன், முதல் நிலை காவலர்கள் சேதுராஜ் ஞானராஜ்,  காவலர் சசிகுமார் மற்றும் ஆயுதப்படை காவலர் சித்தராஜ் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று (04.01.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராசாபட்டி விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த TN 69 K 2509 (TATA Magic) என்ற எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 7 மூடைகளில் காப்பர் வயர்கள் இருப்பதும், அவற்றை எட்டையாபுரம் சிந்தலக்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பவர் பிளான்டிலிருந்து திருடி எடுத்து வந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் அந்த சரக்கு வாகனத்தில் இருந்த  1) மாரிமுத்து (40), த/பெ. பொன்னுச்சாமி, மாப்பிள்ளையூரணி தூத்துக்குடி, 2) பழனிமுருகன் (40), த/பெ. முத்து முனியாண்டி, துப்பாசுபட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் 3) பாக்கியராஜ் (38), த/பெ.  வெள்ளைச்சாமி கோவில்பிள்ளைவிளை தாளமுத்துநகர், தூத்துக்குடி ஆகிய 3 பேரையும் கைது செய்து, 7 மூட்டைகளில் இருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 210 கிலோ காப்பர் வயர்களையும், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாகனத்தில் இருந்த 7 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற எதிரிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தனியார் பவர்பிளான்டில் காப்பர் வயர்களை திருடிய எதிரிகள் 3 பேரை கைது செய்து, காப்பர் வயர்களையும், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலிசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Previous Post

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Next Post

பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

Next Post
பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

பேருந்து நிலையத்தின் முன்பு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை விழிப்புணர்வு - சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In