மதுக்கடைக்கு தடை விதிக்க மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
நாகர்கோயில்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா ஏழு தேசம் பேரூராட்சி உட்பட்ட இரண்டு மதுபானக்கடைகள் வருவதற்கு தடை விதிக்க கோரி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் உஷா தலைமை வகித்தார்
நித்திரவிளை சந்திப்பில் உள்ள அமைக்கப்படவுள்ள இரண்டு கடைகள் மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளதால் இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நெரிசலாக காணப்படும் மதுபான கடையை அமைக்கும் பட்சத்தில் மது அருந்தி சென்று அட்டகாசம் செய்பவர்களால் பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் மதுபான கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். மேலும் கட்சித் தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.

