வாகன விபத்தை நிர்ணயிக்கும் இரண்டு வினாடிகள்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிவருவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. அதில் குறிப்பாக முக்கிய சாலை சந்திக்கும் இடங்களில் அதிக அளவில் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே மேற்படிபோன்றவற்றை அமைக்கும் போது அதை கவனிக்கும் வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை பயன்படுத்துவதன் மூலமும், வேகத்தை குறைப்பதன் மூலமும் தவறும் பட்சத்தில் பிரேக்கை பயன்படுத்தி விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப, பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் தேசிய நெடுஞ்சாலையில் சாலைவிபத்து அதிகமாக ஏற்படும் பகுதியாக KLRF மாவு மில் ஜங்சன் கண்டறியப்பட்டு அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டில் ஒளிரும் விளக்குகள் மேற்படி KLRF ஜங்சனில் அமைக்கப்பட்டது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப நேரில் சென்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெபராஜ், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் பெருமாள், உதவி ஆய்வாளர் மாடசாமி மற்றும் சிப்காட் திட்ட அலுவலர் நஷீர் அகமது மற்றும் சிப்காட் தனியார் நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

