பொதுமக்களின் வசதிக்காகவும் குற்ற தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் தமிழக முதல்வரால் ஜனவரி 1ம்தேதி அன்று சென்னை மாநகரில் இருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மறைமலை நகர் ஓட்டேரி கூடுவாஞ்சேரி கேளம்பாக்கம் தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சோமங்கலம் மணிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களும் சென்னை மாநகர மேற்கு மண்டலத்தில் இருந்து குன்றத்தூர் காவல் நிலையமும்,சென்னை மாநகர தெற்கு மண்டலத்தில் இருந்து தாம்பரம் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பீர்க்கன்காரணை செம்மஞ்சேரி கண்ணகி நகர் பெரும்பாக்கம் சேலையூர் சிட்லபாக்கம் பள்ளிக்கரணை கானாத்தூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளடக்கி தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது முதல் தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. 8525007100 என்ற தொலை பேசி எண்ணிற்குபொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் அவர்களுடைய புகார் உடனடியாக விசாரிக்கப்படும்.

