• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
January 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கி தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம் ஜன 4
நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கூட்டுறவு பண்டக சாலையில்; அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்;; அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.


இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 357 நியாய விலை கடைகள் உள்ளன. 215107 குடும்பஅட்டைதாரர்களுக்கு இன்று முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு குடும்பஅட்டைதாரருக்கும் வருகின்ற 12ஆம் தேதி வரை வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் பொங்கள் பண்டிகை முடிந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 200 டோக்கன் என்ற முறையில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும், கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும். 15 வயது முதல் 18 வயது பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கிய முதல் நாளிலே 13சதவீதம் போடப்பட்டுள்ளது. இன்னும் 1 வாரத்திற்குள் 100 சதவீதம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில்; மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட துணை பதிவாளர் கனகசபாபதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், மாவட்ட வழங்கல் அலுவலர் தெய்வநாயகி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், வட்டாட்சியர் ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் ;கலந்துக் கொண்டனர்.

படம் உள்ளது

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

Previous Post

புதூர் பகுதியில் ஆட்டோவில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது – 410 மது பாட்டில்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல்

Next Post

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் – தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

Next Post
பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம்  – தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் - தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In