செய்துங்கநல்லூர் அருகே 1 லட்சம் மதிப்பில் உள்ள புகையிலை பறிமுதல்! போலீசாரை பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்.
———————-
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 1,00,000/- ( ஒரு லட்சம்) மதிப்புள்ள 300 பண்டல் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 2 பேர் கைது – புகையிலைப் பொருட்களும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ், தலைமை காவலர்கள் நிறைகுளத்தான், சற்குணம் மற்றும் காவலர் நயினார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (02.01.2022) செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த TN 75 S 5950 Honda Dio என்னும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் லிங்கபெருமாள் (26), த/பெ. முருகேசன், நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சாம்ராஜ் (23), த/பெ. சந்திரன், வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம் ஆகியோர் என்பதும் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 3 சாக்கு மூட்டைகளில் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.*
உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒருவரிடம் குறைந்த விலைக்கு புகையிலைப் பொருட்களை வாங்கி திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.*
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகள் லிங்கபெருமாள் மற்றும் சாம்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 1,00,000/- ( ஒரு லட்சம்) மதிப்புடைய 300 பண்டல்களில் மொத்தம் 45 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.*

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.*
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 2 எதிரிகளை கைது செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்.*

