மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
செல்வகுமார் (36) த/பெ. ஜெயபாண்டி அம்மன் கோவில் தெரு, மடத்தூர், தூத்துக்குடி என்பவர் நேற்று (02.01.2022) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மார்க் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாக்கியராஜ் (21) த/பெ. கோயில்பிச்சை, P & T காலனி, தூத்துக்குடி என்பவர் மதுபோதையில் செல்வகுமாரிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து எதிரி பாக்யராஜை கைது செய்தார்.

