• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!

policeseithitv by policeseithitv
January 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே
திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு
ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!
————————

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனை சாவடி வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு நேற்று (02.01.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்கள் (Reflecting Sticker) பாதாசாரிகளின் சட்டையின் முதுகு பகுதி மற்றும் பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டியும், சாலை பாதுகாப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதசாரிகளிடம் பேசும்போது, பாதசாரிகள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் போது சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும், இரவு நேரங்களில் மிக கவனமாக செல்ல வேண்டும், சாலையோரம் ஒருவர் பின்னாடி ஒருவர் செல்ல வேண்டும். உங்கள் தோள் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும், அதன் மூலம் நீங்கள் நடந்து செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களுக்கு உங்களை எளிதாக அடையாளம் காட்ட முடியும், இரவு நேரத்தில் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது கையில் டார்ச் வைத்துக் கொள்ள வேண்டும், நீண்ட தூர பயணத்தின் போது ஓய்வு எடுக்கும் போது சாலையை விட்டு தூரமாக நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் ஓய்வு எடுக்க வேண்டும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 100 என்ற எண்ணையும் ஆம்புலன்ஸ் உதவிக்கு 108 என்ற எண்ணையும் அழைக்கலாம் என்றும், பாதயாத்திரையில் உங்கள் குழந்தைளை கவனமாகவும், உங்கள் உடைமைகளை பாதுகாப்பாகவும் வைத்துக் கொண்டு சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தற்போது ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவி வரும் அபாய சூழ்நிலை உள்ளதால் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள், உதவி ஆய்வார்கள் சதீஷ், முத்துராமன், கருத்தையா, கண்ணன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.*

செய்தி தொகுப்பு:  கே எஸ் முருகன்
A to z செய்துங்கநல்லூர்

Previous Post

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்

Next Post

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம் எஸ்பி நடவடிக்கை பாயுமா?

Next Post
சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம் எஸ்பி நடவடிக்கை பாயுமா?

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம் எஸ்பி நடவடிக்கை பாயுமா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In