நாகூர் கந்தூரி விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யம் டிச 31
நாகூர் தர்க்காவில் நடைபெறவுள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் டாக்டா் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் விழாவில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடுகள் செய்யவும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உட்பட அரசு அலுவலர்கள், தர்ஹா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்

