நெல்லை அருகே 6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
நெல்லை அருகே சுத்தமல்லி கொண்டா நகரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி இவருக்கு 31/4 கால் சென்டர் நிலம் உள்ளது இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் ஆகும் குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது கணவர் அந்த இடத்தை பத்திரத்தை அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரிடம் அடமானம் வைத்து உள்ளார் அதனால் அவர் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு கிரையம் செய்தனர் இதை அறிந்த ஆதிலட்சுமி தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு அளித்தார் அந்த மனு மீதான உரிய நடவடிக்கை எடுக்கும்படி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸிடம், தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் தனலட்சுமி, ஆகியோருடன் தலைமையிலான முதல் நிலை காவலர் கணேசன், சண்முகம் ,ஆகியோர் விசாரணை நடத்தி 6 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இடம் வழங்கினர் பின்னர் காவல் கண்காணிப்பாளர் சரவணன், அந்த நிலத்திற்கான ஆவணத்தை ஆதிலட்சுமி, இடம் வழங்கினார் நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் போலீசாரை எஸ் .பி .சரவணன், வெகுவாக பாராட்டினார்.

