???? *கூட்டபனை மற்றும் கூடுதாழை கிராம பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்
????திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்பனை மற்றும் கூடுதாழை பகுதியில் உள்ள கிராம பொது மக்களிடம் இன்று *30.12.2021*-ம் தேதி *சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீராள்பானு,* ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் *181* குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க *1098* என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மற்றும்
இக்காலகட்டத்தில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனவும் எனவே பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போனிற்கு வரும் OTP எண்களை பகிர வேண்டாம் எனவும் *இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 155260 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்* என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


