தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 2022ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் வழங்கப்பட்டது.
———-
தூத்துக்குடி பிரஸ் கிளப் பொதுக்குழு கூட்டம் இன்று 29/12/2021 அன்று
மாலை பிரஸ் கிளப் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பின்னர், பிரஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் டைரி மற்றும் காலண்டர் பிரஸ்கிளப் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டடு வருகிறது. அதுபோல்
2022ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி வழங்கும் நிகழ்ச்சி வஉசி சாலையில் உள்ள பிரஸ் கிளப்பில் வைத்து நடைபெற்றது.
பிரஸ்கிளப் கௌரவ ஆலோசகர் அருண் முதல் டைரி காலண்டரை வெளியிட செயற்குழு உறுப்பினர் அகமதுஜான் பெற்றுக்கொண்டார். பின்னர் அனைத்து உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், துணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து,
சட்ட ஆலோசகர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் கோபால்சாமி, அண்ணாதுரை, காதர் முகைதீன், எம். கண்ணன் பார்த்தீபசங்கர், மோகன்ராஜ், மாரிமுத்துராஜ், முரளிகணேஷ், முத்துராமன், ராஜு, , உள்பட பிரஸ்கிளப் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


