சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா! நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெற்றது.
நாசரேத்,டிச.29: சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள், இரண்டாயிரம் பனை விதைகள் நடும் விழா நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் மரக்கன்றுகளை நட்டும், பனை விதைகளை ஊன்றியும் துவக்கி வைத்து உரையாற்றினார். நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன் றிய பெருந்தலைவர் ஜனகர், ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன், ஆழ்வார்திருநகரி வியனரசு, ஏரல் ஆனந்த முதலியார் பர்ம் முருகன், குரும்பூர் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஜமாத் தலைவர் வசூருதீன், செயலாளர் நிஜாம்தீன், பொருளாளர் காதர், அலிஹாஜியார், அப்துல் மஜித், ஜாபர் சாதிக், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் மணத்தி எட்வின், ஹெயின் வெஸ்லி,சாந்தகுமார், ஆகியோர் செய்திருந்தனர்.

