வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர் லோடு ஆட்டோ மோதி உயிரிழப்பு.
வேதாரணியம் டிச 29
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் பகுதியில் தீயணைப்பு வாகனத்தை முந்த முயன்று வளைவில் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த பஞ்சநதிகுளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வாய்மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த ரமேஷின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

