• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச பயிற்சி – டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
December 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நடிகா் ரஜினிகாந்த் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார்

Rajinikanth Felicitates Writer Kalaignanam

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் அறக்கட்டளை தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது: ”ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்த்தி ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம். நிர்வாகம், முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சமுதாயத்தை உருவாக்க எண்ணுகிறோம்.
மனிதகுல சேவையே கடவுளுக்கான சேவை என எண்ணுகிறோம். அதில் முக்கியமானது குந்தைகளுக்கான அறிவு ஆகும். ரஜினிகாந்த் அறக்கட்டளை முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் நடத்தப்படும் அமைப்பு என்பதால் ஆர்வமுள்ள தகுதியான தொண்டர்களும் (தன்னார்வலர்களும்) இதில் இணைந்து இந்த சேவையில் ஈடுபடலாம். தன்னார்வலர்களின் பலம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கண்டறிந்து, அறக்கட்டளையின் முன்முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த விரிவான நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் நாங்கள் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.
தற்போது இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் எங்கள் பயிற்சிக் களத்தில் இந்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். நிர்வாகத்துறைக்கான ஐஏஎஸ் பயிற்சி, ராணுவம், நீதித்துறை, காவல்துறை, மத்திய, மாநில அமைச்சுப் பணி, வங்கிப் பணிகளில் ஈடுபடுத்தவும் தகுதிவாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரம்: வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 20 சதவீதம், முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் மாணவர்களுக்கு 20 சதவீதம், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 10 சதவீதம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒற்றை பெற்றோர் உள்ள குழநதைகளுக்கு 14 சதவீதம், 3 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு 16 சதவீதம், பொதுப்பிரிவில் முதல் மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவ அல்லது மாணவியருக்கு 20 சதவீதம் எனப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ரஜினி அறக்கட்டளையுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 044 3556 7696 மற்றும் 98400 59805 ஆகிய எண்களிலும் Tycoon House of Justice, No.2, First Floor,4th Main Road, R.A.Puram, Chennai 28 என்ற முகவரியிலும் அணுகலாம்”. இவ்வாறு ரஜினிகாந்த் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
Previous Post

சிறப்பாக பணியாற்றிய ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கோவை டி.ஐ.ஜி நேரில் பாராட்டு

Next Post

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி

Next Post
உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In