உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி
வேதாரண்யம் டிச 29
நாகப்பட்டினம் மாவட்;டம் புத்தூர் புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சியினை நேற்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், திருமருகல், கீழ்வேளுர், நாகப்பட்டினம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 85 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பேசியதாவது:
ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் கடமைகள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், ஊராட்சி ஒன்றிய கூட்டங்கள், ஊராட்சி ஒன்றிய குழுக்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையரின் கடமைகள், பொறுப்புகள், ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் வரவு செலவு திட்டங்கள், ஊராட்சி ஒன்றிய நிதி நிர்வாகம் குறித்த பல்வேறு தலைப்புகளில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சியை அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும்; சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் ராஜசேகர், பட்டுக்கோட்டை, மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கணக்கு அலுவலர் சேகர், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலக கண்காணிப்பாளர் (செயல்) வெற்றிச்செல்வன், மாவட்ட பயிற்சி மையத் தலைவர் உமாமகேஸ்வரி உட்பட நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

